Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சத்யசாய்/இது ஆன்மிக வைட்டமின்

இது ஆன்மிக வைட்டமின்

இது ஆன்மிக வைட்டமின்

இது ஆன்மிக வைட்டமின்

ADDED : ஏப் 01, 2010 04:52 PM


Google News
Latest Tamil News
* நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவேண்டிய அனைத்து முயற்சிகளையும் செய்யுங்கள்.

* உணவில் ஏற்படும் சத்துக்குறைவைக் காட்டிலும், மன வளத்தில் உண்டாகும் குறைவே நம்மை நோயில் தள்ளிவிடுகிறது. எல்லாக் குறைபாட்டிற்கும் சரியான மருந்து 'கடவுள்' என்னும் ஆன்மிக வைட்டமின் தான்.

* கவலைகளின் வேர், வேண்டாத ஆசைகள் தான். கடவுளின் பொறுப்பில் முற்றிலுமாக உங்களை ஒப்படையுங்கள். உங்களுக்கு எது தேவையோ, எது நல்லதோ அதை நிச்சயம் அவர் தர மறுப்பதில்லை.

* ஆண்டவனின் தோட்டத்தில் நாம் அனைவரும் புத்தம் புதுமலர்கள் போல பூத்திருக்கிறோம். சங்கரரின் ஞானத்தையும், புத்தரின் கருணை ததும்பும் இதயத்தையும் நாம் பெற வேண்டும். அப்போது தான் நாம் முழு மனிதர்களாவோம்.

* உங்களை யாரும் குறை கூறினாலோ, அவதூறாகப் பேசினாலோ அதையே அவருக்கு திரும்ப செய்ய வேண்டாம். நாய் ஒருவனைக் கடித்தால் அவனும் நாயைத் திரும்பக் கடிக்க வேண்டியதில்லை. சகிப்புத் தன்மையுடன் நடந்து கொள்வதே உயர்ந்த பண்பாகும்.

-சாய்பாபா





      Our Apps Available On




      Dinamalar

      Follow us